இந்த தார் சாலை 25 mm அளவில் போடப்பட வேண்டும் ஆனால் இந்த தார்ச்சாலை 10 mmக்கும் குறைவாக இருப்பதாக காக்கங்கரை பகுதியை சார்ந்த சுரேஷ் என்பவர் குற்றம் சாட்டியுள்ளார், இதுகுறித்து ஊடகங்களில் செய்தி வெளியாகியதின் காரணமாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரன் உத்தரவின் பெயரில் திட்ட இயக்குனர் செல்வராசு மற்றும் அரசு அதிகாரிகள் தரம் குறித்து ஆய்வு கள ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அதிகாரிகள் தெரிவிக்கையில் 20 mm மேலாகவே தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது எனவும் மேலும் தார்ச்சாலை தரமாக உள்ளது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அரசு போடப்பட்ட தார் சாலையை அத்து மிறி காக்கங்கரை பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் தரமாக இல்லை எனக் கூறி கையில் பேத்தெடுத்துள்ளார்.
பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் நேரு கந்திலி காவல் நிலையத்தில் அரசு போடப்பட்ட ரூபாய் 50 ஆயிரம் மதிப்பிலான தார்சாலையை சேதப்படுத்த எதற்காகவும் பணி செய்யலாம் தடுத்ததற்காகவும் சுரேஷ் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment