திருப்பத்தூர் மாவட்டம் கசிநாயக்கன்பட்டியில் உள்ள ஜிபிஎம் திருமண மஹாலில் திருப்பத்தூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் பணிகள் சார்பில் 2023 ஆண்டின் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
இதில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் குத்துவிளக்கேற்றி வளைகாப்பு சமுதாய வளைகாப்பு விழாவை துவக்கி வைத்தார். இந்த விழாவில் திருப்பத்தூர் மற்றும் கந்திலி பகுதிகளுக்கு உட்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு 210 பேருக்கு தட்டு வரிசையை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, திருப்பத்தூர் கந்திலி ஒன்றிய சேர்மன் திருமதி திருமுருகன் துணை சேர்மன் மோகன். கந்திலி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் மோகன்ராஜ். முருகேசன் மாவட்ட திட்ட அலுவலர் செந்தில்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment