திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை கேத்தாண்டப்பட்டி பகுதியில் செயல்பட்டு வருகிறது, இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு கேத்தாண்டப்பட்டி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2023-34 ஆம் ஆண்டு கரும்பு அருவைப்பருவ துவக்க விழா கடந்த 30 ஆம் தேதி திருப்பத்தூர் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டும், திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குனர் பிரியா மற்றும் கரும்பு அபிவிருத்தி அலுவலர் ரமேஷ் நாராயணன், கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக குழு தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் துவக்க விழா நடைபெற்றது.
இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கரும்பு விவசாயிகள் கரும்புகளை வெட்டிக்கொண்டு லாரி லாரியாக ஆக ஏற்றிக்கொண்டு கரும்பு ஆலைக்கு கொண்டு வந்தனர். மேலும் திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் டிராக்டர்கள் மூலம் கரும்புகளை கொண்டு வந்து குவித்தனர்.
ஆனால் அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக இதுவரை கேத்தாண்டப்பட்டி கரும்பு ஆலையில் கரும்பு அரவை தொடங்காததால் கரும்பு விவசாயிகள் கடும் வேதனைக்குள்ளாகி வருகின்றனர். மேலும் கரும்பு அரவை விழா தொடங்குவதற்கு விவசாயிகளுக்கு முறையாக அழைப்பிதழ் வழங்கப்படவில்லை வேதனை தெரிவித்தனர்.
- செய்தியாளர் கோபிநாத்.
No comments:
Post a Comment