திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆல்பர்ட் ஜான்,IPS., வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். ஓவ்வொரு மாவட்டத்திலும் காவல்துறையின் ஆயுதப்படைப் பிரிவை ஆண்டுக்கு ஒரு முறை கண்காணிப்பாளர் அவர்கள் ஆய்வு மேற்கொள்வது வழக்கம். அதன்படி திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படைப் பிரிவை இன்று (02.12.2023) திரு.ஆல்பர்ட் ஜான்,IPS., அவர்கள் 2023ம் ஆண்டுக்கான ஆய்வை மேற்கொண்டார். அவருடன் ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் திரு.விநாயகம் அவர்கள் உடனிருந்தார்.
இதில் ஆயுதப்படை காவலர்களின் கவாத்து (Parade), பின் ஆயுதப்படை காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உபகரணங்கள் மற்றும் உடமைகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment