நிகழ்ச்சியில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜி, திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரியகுமார், மாவட்ட ஆவின் பால் தலைவர் எஸ் ராஜேந்திரன். மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, நகரமன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன், நகர மன்ற துணைத் தலைவர் ஏ ஆர் சபியுல்லா. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வடிவேல். மற்றும் திமுக கட்சியினர் பலர் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டனர் மருத்துவ இணை இயக்குனர் செந்தில்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கொரானோ சிங்கப்பூர் மற்றும் கேரளாவில் இருந்து வந்தவர்களை சோதனை செய்தபோது சுமார் 20 நபர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்றனர். அவர்கள் அனைவருக்கும் தற்போது நெகட்டிவ் என வந்துள்ளது. அதனால் அச்சம் தேவையில்லை என்றார்.
தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளுக்கு மருத்துவர், மருந்தாளுநர்கள், செவிலியர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள். கொரானோ நேரத்தில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் வழக்கு இருந்ததால் தான் பணி நியமனம் செய்யப்படவில்லை. தற்போது அது தீர்க்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் 11 மருத்துவ கல்லூரி துவங்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளில் திருப்பத்தூர் மாவட்டத்திற்கும் மருத்துவ கல்லூரி வரும்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment