நாட்டறம்பள்ளி பகுதியில் ரூபாய் 4.20 கோடி மதிப்பீட்டில் புதிய 14 அரசு துணை சுகாதார கட்டிடங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் இன்று காலை திறந்து வைத்தார். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 20 December 2023

நாட்டறம்பள்ளி பகுதியில் ரூபாய் 4.20 கோடி மதிப்பீட்டில் புதிய 14 அரசு துணை சுகாதார கட்டிடங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் இன்று காலை திறந்து வைத்தார்.


திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி ஒன்றியம் ஆத்தூர் குப்பம் ஊராட்சிக்கு பகுதிக்கு உட்பட்ட ஜங்கலாபுரம் பகுதியில் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜங்கலாபுரம், குடியானகுப்பம், மண்டலவாடி, லட்சுமி நகர், பெரியகரம், லக்கிநாயக்கன்பட்டி, பாச்சல், அகரம், குரும்பகேரி, பள்ளிப்பட்டு, ராவுத்தம்பட்டி, வடப்புதுப்பட்டு,காமராஜபுரம், பெரியபேட்டை உள்ளிட்ட 14 இடங்களில் தலா ரூபாய் 30 லட்சம் மதிப்பீட்டில் மொத்தம் ரூபாய் 4.20 கோடி செலவில் புதியதாக கட்டப்பட்ட புதிய துணை சுகாதார நிலையம் திறப்பு விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் தெ. பாஸ்கரன் பாண்டியன் தலைமை தாங்கினார்  வட்டார மருத்துவ அலுவலர் செல்லமுத்து வரவேற்றார் திருப்பத்தூர் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில் திட்ட விளக்க உரையாற்றினார் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.தேவராஜ் முன்னிலை வகித்தார் மருத்துவம் மற்றும் மக்கள் நலத்துறை அமைச்சர் மா‌. சுப்பிரமணியன் ஜங்கலாபுரம் பகுதியில் உள்ள புதிய துணை சுகாதார நிலைய ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் அதன் பிறகு மீதமுள்ள 13 புதிய துணை சுகாதார நிலைய கட்டிடங்கள் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.


இவ்விழாவில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், பேரூராட்சி தலைவர் சசிகலா சூரியக்குமார், ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் எஸ் சத்யா சதிஷ்குமார் ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ், கே,சதிஷ்குமார் மாவட்ட கவுன்சிலர் கவிதா தண்டபாணி, உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர் முடிவில் ஆத்தூர்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ். செந்தில்குமார் நன்றி கூறினார்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/