தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய காத்திருப்பு போராட்டம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. இதில் 1999ம் ஆண்டு வழங்கப்பட்ட கடந்த 23 ஆண்டுகளாக பெற்று வந்த கிராம உதவியாளர்களின் கருணை அடிப்படையிலான வாரிசுக்கு வேலை கடந்த 8.03.2023 அன்று நிறுத்தப்பட்டது.
அதனைத் திரும்ப வழங்க வேண்டியும் , அரசு ஊழியர் பட்டியலில் D பிரிவை இணைக்க வேண்டிய கிராம உதவியாளர்களின் 14 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றி கோரி மாண்புமிகு தமிழக முதல்வரின் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.இதில் மாவட்டத் தலைவர் சந்திரமோகன், துணைத் தலைவர் பிரகாஷ்,மாநில செயற்குழு உறுப்பினர் மணிகண்டன், குமரன் வட்டத் தலைவர் ரமேஷ், மற்றும் பொருளாளர் லட்சுமி மாவட்ட செயற்குழு உறுப்பினர் அண்ணாமலை. மற்றும் சங்க உறுப்பினர்கள் என ஏராளமாக கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment