இளைஞர் காங்கிரஸ் கமிட்டி சார்பில் நல திட்ட உதவிகள் கொடுக்க இருந்தபோது நகர காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தை தலைவர் பூட்டி சென்றதால் இளைஞர் காங்கிரஸ் கமிட்டியினர் தர்ணா, திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த லண்டன் மெஷின் ரோட்டில் நகர காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் அமைந்துள்ளது.
இதில் திருப்பத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டியினர் பல்வேறு நிகழ்ச்சிகளும் நல திட்ட உதவிகளும் வழங்கி வருவது வழக்கம். இந்த நிலையில் சோனியா காந்தியின் 77 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இளைஞர் காங்கிரஸ் கமிட்டி மாவட்ட செயலாளர் பார்த்திபன் மற்றும் இளைஞர் காங்கிரஸ் கமிட்டி நகர தலைவர் சையத் தஸ்தகீர் ஆகியோர் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற இருந்தது.
இந்த நிலையில் நகர காங்கிரஸ் கமிட்டி அலுவலக தலைவர் ஜெகநாதன் இந்த நிகழ்ச்சி நடத்த அனுமதிக்காமல் கட்டிட அலுவலகத்தை பூட்டு போட்டு சென்றதால் இளைஞர் காங்கிரஸ் கமிட்டியினர் திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment