ஜோலார்பேட்டை பகுதியில் வீடு இல்லாமல் தவித்து வந்த குடும்பத்தினருக்கு நான்கு லட்சம் மதிப்பில் தன்னுடைய சொந்த செலவில் வீடு கட்டி கொடுத்த நகர மன்ற தலைவர்! கண்ணீர் மல்க நன்றி கூறிய குடும்பத்தினர்! - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 8 December 2023

ஜோலார்பேட்டை பகுதியில் வீடு இல்லாமல் தவித்து வந்த குடும்பத்தினருக்கு நான்கு லட்சம் மதிப்பில் தன்னுடைய சொந்த செலவில் வீடு கட்டி கொடுத்த நகர மன்ற தலைவர்! கண்ணீர் மல்க நன்றி கூறிய குடும்பத்தினர்!


திரும்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மேல்சக்கரகுப்பம்  ஊசிநாட்டான் வட்டம் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி மற்றும் முருகம்மாள் தம்பதியினருக்கு  3ஆண் பிள்ளைகள் 2 பெண் பிள்ளைகள் உள்ளனர், இந்த நிலையில் மூர்த்தி மிதிவண்டியில் தேனீர் வியாபாரம் செய்து வருகிறார். 

இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு பெய்த மழையின் காரணமாக மூர்த்தி முருகம்மாள் தம்பதியரின் குடிசை வீடு சேதம் அடைந்துள்ளது, அதன்பின் இவர்கள் இருக்க இடம் இன்றி அதே பகுதியில் உள்ள உறவினர்கள் வீடு தெரிந்தவர்கள் வீடு என குடும்பத்துடன் வசித்து வந்துள்ளனர், அதனை தொடர்ந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவில் மூர்த்தி முருகம்மாள் தம்பதியினர் தங்களுக்கு வீடு கட்டி தர வேண்டும் என ஜோலார்பேட்டை திமுக கட்சியின் நகர மன்ற தலைவர் காவியா விக்டரிடம் மனு அளித்துள்ளனர். 


மனுவைப் பெற்றுக் கொண்ட நகர மன்ற தலைவர் காவியாவிக்டர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டுடார், அதன் பின்பு தன்னுடைய சொந்த செலவில் 4லட்சம் மதிப்பில் புதியதாக அவர்களுக்கு வீடு கட்டி கொடுத்து அந்த வீட்டினை இன்று திறந்து வைத்து வீட்டின் சாவியை மூர்த்தி முருகம்மாள் தம்பதியினரிடம் கொடுத்தார்.


சாவியைப் பெற்றுக் கொண்ட மூர்த்தி முருகம்மாள் தம்பதியினர் நகர மன்ற தலைவர் காவியா விக்டருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

மாவட்ட செய்தியாளர்.

மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/