திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி தாலுக்கா, புதுப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் காவல் படையை சேர்ந்த சுமார் 40 மாணவிகளுக்கு காவல்நிலைய நடைமுறையை பற்றிய விளக்கத்தை காவல் உதவி ஆய்வாளர்கள் எடுத்துரைத்தனர்.
காவல் நிலைய கோப்புகளை பற்றிய விளக்கத்தையும் நடைமுறையை பற்றியும் விரிவாக விளக்கினர். பல்வேறு வகையான துப்பாக்கி குறித்தும், தோட்டாக்கள் குறித்தும் விரிவாக விளக்கினர். இந்த நிகழ்ச்சியில் சுமார் 44 மாணவிகள் ஆசிரியர் செலினா தலைமையில் காவல்நிலையத்திற்கு சென்று நடைமுறைகளை தெரிந்துக்கொண்டனர்.
இதுபோன்று காவல் நிலைய நடைமுறைகள் பற்றிய விழிப்புணர்வை அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் ஏற்படுத்த வேண்டும் என்றும் மாணவிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment