இதனை தொடர்ந்து திருப்பத்தூர் நகராட்சி சார்பில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் மின்சார துறை,வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் துறை, கூட்டுறவுத்துறை, ஆதிதிராவிடர் நலன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, உள்ளிட்ட துறை சார்பாக மனுக்கள் பெரும் முகாம் நடைபெற்றது.
அப்போது திருப்பத்தூரில் உள்ள,14,15,16,17,28,30,31, உள்ளிட்ட வார்டுகளுக்கு மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் தங்களது தேவைகள் குறித்து மனு அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது, ஆனால் இன்று முகாம் நடைபெற்ற ஒவ்வொரு பிரிவினையும் சென்று மனுவினை ஆய்வு மேற்கொண்ட வருவாய் அலுவலர் வளர்மதி குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர்கள் தேவராஜ், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, மாவட்ட ஆவின் பால் தலைவர் எஸ் ராஜேந்திரன். நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசு,நகர மன்ற தலைவர் சங்கிதா வெங்கடேஷ். நகர மன்ற துணைத் தலைவர் சபியுல்லா முன்னாள் சேர்மன் அரசு . வட்டாட்சியர் சிவப்பிரகாசம்உள்ளிட்ட துறை சார்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- செய்தியாளர் கோபிநாத்.
No comments:
Post a Comment