புதூர் நாடு மேலூர் கிராமத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி பட்டா நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீட்டிற்கு சட்டத்திற்கு புறம்பாக மின் இணைப்பை தடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 18 December 2023

புதூர் நாடு மேலூர் கிராமத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி பட்டா நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீட்டிற்கு சட்டத்திற்கு புறம்பாக மின் இணைப்பை தடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு.


திருப்பத்தூர் மாவட்டம், புதூர்நாடு அஞ்சல், மேலூர் கிராமத்தை சேரந்தவர் பழனி(60). இவருக்கு பாத்தியப்பட்ட நிலம் கிராம சர்வே எண். 31 ல் 3.04 செண்ட் நிலமும், மேலும் பட்டா எண். 12ல் 0.85 செண்ட் நிலம், மற்றும் வெவ்வேறு கிராம சர்வே எண்களில் 0.07, 0.11.5, 1.10.5 செண்ட் நிலம் பழனி என்பவருக்கு சொந்த சுவாதீனத்தில் இருந்து வருகிறது. 

இந்நிலையில் பழனி என்பவரின் மகன் ஆட்டுக்காரன் துக்கன் என்பவர் கடந்த 2000 -ம் தேதியில் இறந்துவிட்டார். மேற்படி நிலத்திற்கு வாரிசு தாரர்கள் பழனி, துக்கன், மாரி, நாச்சி, லேட்.செஞ்சிபதி ஆவார்கள். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த அருணாச்சலம் என்பவர் அவருடைய மனைவி அலுமேலு பெயரில் போலி ஆவணம் மூலம் நிலத்தை ஆக்கிரமித்து சட்டத்திற்கு புறம்பாக மின் இணைப்பு பெறுவதாக  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 


மனுவை விசாரணை செய்து மின் இணைப்பு வழங்க கூடாது என தீர்ப்பு வழங்கியது. அருணாச்சலம் என்பவர் போலி ஆவணம் மூலம் அவருடைய மனைவி அலுமேலு  பெயரில் நிலத்தை ஆக்கிரமித்து சட்டத்திற்கு புறம்பாக மின் இணைப்பு வழங்கப்படுவதை தடுக்கவேணடும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நிலத்தை மீட்க போராடி வரும் மலை கிராமவாசி. நியாயம் கிடைக்க தொடர்ந்து போராடுவதாக தெரிவித்தனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/