திருப்பத்தூர் அருகே 30க்கும் மேற்பட்ட கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பேருந்து வசதியை ஏற்படுத்திக் கொடுத்த கலெக்டர் மற்றும் எம்எல்ஏ! பேருந்தை மயிலாட்டம் ஆடியும் ஒயிலாட்டம் ஆடி வரவேற்ற பொதுமக்கள். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 28 January 2024

திருப்பத்தூர் அருகே 30க்கும் மேற்பட்ட கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பேருந்து வசதியை ஏற்படுத்திக் கொடுத்த கலெக்டர் மற்றும் எம்எல்ஏ! பேருந்தை மயிலாட்டம் ஆடியும் ஒயிலாட்டம் ஆடி வரவேற்ற பொதுமக்கள்.


திரும்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட பேராம்பட்டு சின்ன பேராம்பட்டு, அம்பேத்கர் நகர், சகாதேவன் கொட்டாய்,மங்காத்தா வட்டம், கொட்டவூர், உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளது. மேலும் இப்பகுதியில் இருந்து சென்னைக்கு செல்ல பேருந்து வசதி வேண்டுமென அப்பகுதி மக்களும் விவசாயிகளும் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்த நிலையில் அதன் கோரிக்கையை ஏற்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி ஆகியோர் சீரிய முயற்சியின் காரணமாக தமிழ் நாடு போக்குவரத்து வரத்து கழக்கத்தின வாயிலாக விழுப்புரம் கோட்டம் வேலூர் மண்டலம் திருப்பத்தூர் பணிமனையில் இருந்து இந்த பேருந்து தினமும் காலை 6.45மணி அளவில் பேராம்பட்டு  பகுதியிலிருந்து  புறப்பட்டு சென்னை பூந்தமல்லி  வரை புதிய வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளது.


அதனை இன்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி என் அண்ணாதுரை ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.


இதன் காரணமாக  கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பேருந்துக்கு ஆரத்தி எடுத்தும் மாடாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், ஆடியும் உற்சாகமாக வரவேற்றனர். மேலும் புதியதாக அரசு பேருந்து இயக்கப்பட்டதை தொடர்ந்து கிராம மக்களும், விவசாயிகளும்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/