இவ்வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு 01.01.2024 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தோர், வாக்காளர் பட்டியல் இடம் பெறாதோர், பெயர் நீக்கம் ,திருத்தம், முகவரி மாற்றம் ஆகியவற்றிற்காக முகாம்கள் அமைத்து திருப்பத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் படிவங்கள் பெறப்பட்டது.
அந்த படிவங்கள் அனைத்தும் அந்தந்த வாக்குசாவடி நிலை அலுவலர்கள் மூலமாக முதற்கட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அவை உதவி வாக்காளர் பதிவு அலுவலர் நிலையில் மேலாய்வு செய்யப்பட்டு வாக்காளர் பதிவு அலுவலர்களால் தகுதியின் அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வாக்காளர் பட்டியலில் 24,178 நபர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டும், 8665 நபர்களின் பெயர்கள்நீக்கம் செய்தும் மற்றும் 7913 எண்ணிக்கையிலான படிவங்கள் திருத்தங்கள் மேற்கொண்டும் சிறப்பு சுருக்குமுறை திருத்தம் 2024ன் படி இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (22.1.2024) வெளியிடப்பட்டது.
மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் 4,66,381 ஆண் வாக்காளர்களும் 4,81,808 பெண் வாக்காளர்களும் மூன்றாம் பாலினத்தவர் 130 வாக்காளர் என மொத்தம் 9,48,319 வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது, மேலும் வெளியிடப்பட்டுள்ள இந்த வாக்காளர் பட்டியல் அனைத்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் அந்தந்த பகுதிகளில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்களின் பார்வைக்கு வைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் இன்று தெரிவித்தார், மேலும் இந்த நிகழ்வின்போது அனைத்து கட்சி நிர்வாகிகள், துறை சார்ந்த அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment