பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் கையெழுத்து இயக்கம் தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியர். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 22 January 2024

பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் கையெழுத்து இயக்கம் தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியர்.


பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கையெழுத்து இயக்கத்தினை துவக்கி வைத்தார். மேலும் அனைத்து துறை அரசு அலுவலர்களும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். 

திருப்பத்தூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் வரும் ஜனவரி 24 சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தினை முன்னிட்டு பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கையெழுத்து இயக்கத்தினை துவக்கி வைத்தார். மேலும் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் திருமாவளவன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள்  கையெழுத்திட்டனர். அவர்களை‌தொடர்ந்து பள்ளி மாணவிகள் கையெழுத்திட்டனர்.



முன்னதாக அனைத்து துறை அரசு அலுவலர்களும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் நடவடிக்கைகளுக்கும் செயல்பாட்டிற்கும் உறுதுணை புரிவோம் என்றும் கருவில் வளரும் சிசுவின் பாலினத்தை எக்காரணம் கொண்டும் அறிந்து கருக்கொலை செய்ய முயல மாட்டேன் எனவும் பெண் குழந்தைகளுக்கு எவ்வித பாகுபாடும் இன்றி சமமான மதிப்பளிப்போம் பெண் குழந்தைகள் உயர்கல்வி தொடர்வதை உறுதி செய்வோம் குழந்தை திருமணத்தை நடத்தவோ ஆதரிக்கவோ மாட்டோம் எனவும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த தகவல்களை உரிய அலுவலர்களிடம் உறுதியாக தெரிவிப்போம் எனவும் பெண் குழந்தைகளின் பெருமையை போற்றி எதிர்காலத்தில் பெண் குலம் தழைக்க செய்வோம் என உறுதி அளிக்கிறோம்  என்ற உறுதி மொழியை ஏற்றுக் கொண்டனர். 


இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி,  மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் திருமாவளவன், சகி ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி சாந்தி , அனைத்து துறை அரசு அலுவலர்கள் மற்றும் ஏராளமான பெண் குழந்தைகள் பங்கு பெற்றனர்.

மாவட்ட செய்தியாளர்.

மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/