திருப்பத்தூர் நகராட்சி உட்பட்ட பகுதிகளில் உள்ள கச்சேரி தெரு ஜின்னா ரோடு, கௌதம் பேட்டை,உள்ளிட்ட பல்வேறு பகுதியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை மாவட்ட ஆவின் தலைவர் துவக்கி வைத்தார். தமிழர்களின் திருநாளாம் பொங்கல் பண்டிகை விழாவை பொதுமக்கள் சிறப்பாக கொண்டும் வகையில் தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் பணத்துடன் அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட கச்சேரி தெரு, ஜின்னா ரோடு, கௌதம் பேட்டை,உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள நியாய விலை கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை திருப்பத்தூர் மாவட்ட ஆவின் தலைவர் எஸ் ராஜேந்திரன் துவக்கி வைத்தார். அப்போது உடன் திருப்பத்தூர் நகர்மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன், நகர மன்ற துணைத் தலைவர் சபியுல்லா நகர்மன்ற, உறுப்பினர்கள் சுபாஷ், ஐயப்பன். மாவட்ட அறங்காவல் குழு தலைவர் சந்திரசேகரன். பொன் நாகராஜ் மற்றும் ஆளும் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment