15 லட்சம் போடுவதாக கூறிய மோடி 15 பைசா கூட போடவில்லை! ஆட்டுக்குட்டி அண்ணாமலையை பற்றி நாம் பேச வேண்டியது அவசியம் இல்லை! ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் பொங்கல் தொகுப்பு வழங்கும் விழாவில் பேச்சு! - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 10 January 2024

15 லட்சம் போடுவதாக கூறிய மோடி 15 பைசா கூட போடவில்லை! ஆட்டுக்குட்டி அண்ணாமலையை பற்றி நாம் பேச வேண்டியது அவசியம் இல்லை! ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் பொங்கல் தொகுப்பு வழங்கும் விழாவில் பேச்சு!


தமிழ்நாடு முழுவதும் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. அதேபோல் திருப்பத்தூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு 3.29,700 குடும்ப அட்டைதார்களுக்கு அரிசி, சர்க்கரை மற்றும் ரூ.1000/- பணத்தொகுப்பு வழங்கிட ரூ.36.54கோடி மற்றும் முழுகரும்பு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து வழங்க ரூ.1.08 கோடி என மொத்தம் ரூ.37.62 கோடிக்கான பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வழங்கப்படவுள்ளது.

இந்த நிலையில் தாமலேரிமுத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மட்டும் 8197 குடும்ப அட்டைதரார்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. அப்போது கலந்து கொண்ட ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் மேடையில் பேசியபோது பாரதப் பிரதமர் மோடி 15,000 வங்கி கணக்கில் செலுத்துவதாக கூறினார் ஆனால் 15 பைசா கூட செலுத்தவில்லை ஆட்டுக்குட்டி அண்ணாமலையை பற்றி நாம் பேச வேண்டிய அவசியம் இல்லை என பேசினார். பொங்கல் வகுப்பு கொடுக்கும் விழாவில் அண்ணாமலை பற்றிய பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


இந்த விழாவில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் சத்தியா சதீஷ், மாவட்ட ஆவின் தலைவர் ராஜேந்திரன், திருப்பத்தூர் நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன் துணைச் சேர்மன்  ஏ ஆர் சபியுல்லா மற்றும் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/