நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலையில் எம்பி அண்ணாதுரை கலந்து கொண்டார். மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை எம்எல்ஏவுமான தேவராஜி, அணைக்கட்டு எம்எல்ஏ நந்தகுமார்,மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் வடிவேல் தொழிலாளர் அணி மாவட்ட தலைவர் ரமேஷ், முன்னாள் பஞ். தலைவர்கள் கோவிந்தசாமி, பொன்னுரங்கம், மாவட்ட கவுன்சிலர்கள் கவிதா தண்டபாணி,சிந்துஜா ஆகியோர் உடன் இருந்தனர்.
அப்போது பொங்கல் பண்டிகை குறித்து மலைவாழ் மக்கள் கூறுகையில், பொதுவாக ஏலகிரி மலையில் தீபாவளி பண்டிகை கொண்டாடுவது இல்லை. ஆனால் மாட்டு பொங்கலை மலை வாழ் மக்கள் சிறப்பாக கொண்டாடுவார்கள். அப்போது, மலையில் உள்ள 14 குக்கிராமங்களிலும் உள்ள விவசாயிகள் அலங்கரிக்கப்பட்ட தங்கள் மாடுகளை பட்டியில் அடைத்து அதன் நுழைவாயில் முன் பல்வேறு வகையான பழங்கள், காய்கறிகள் மற்றும் பொங்கல் வைத்து வழிபடுவார்கள். பின்னர் இலையில் உள்ள அனைத்தையும் பிசைந்து மாடுகளுக்கு உணவாக வழங்குவார்கள்.
அதன்பின் பொங்கலை பழங்களுடன் சேர்த்து உருண்டையாக உருட்டி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு வழங்குவார்கள், இந்த உணவை சாப்பிடுவதற்காகவே அதிக அளவில் இங்க வருவார்கள் என்றனர்.
- செய்தியாளர். கோபிநாத்.
No comments:
Post a Comment