ஜொலிக்கும் ஜோலார்பேட்டை ரூ.40 லட்சம் மதிப்பில் மின் விளக்கு கம்பங்கள் பயன்பாட்டு வந்தது. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 18 January 2024

ஜொலிக்கும் ஜோலார்பேட்டை ரூ.40 லட்சம் மதிப்பில் மின் விளக்கு கம்பங்கள் பயன்பாட்டு வந்தது.


திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடியில் இருந்து சேலம் வரை சாலை விரிவாக்க பணி நடந்து வருகிறது.இதில் வாணியம்பாடி முதல் ஊத்தங்கரை வரை 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில், திருவண்ணாமலை எம்பி தொகுதிக்கு உட்பட்ட ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்துார் தொகுதியில், எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடந்து வருகிறது. அந்த வகையில், ஜோலார்பேட்டையில் எம்பி தொகுதி நிதியில் இருந்து ரூ.40 லட்சம் மதிப்பில் சாலை நடுவே அமைக்கப்படும் அலங்கார சீரியல் பல்பு சுற்றப்பட்ட 32 மின் விளக்கு கம்பத்தை எம்பி அண்ணாதுரை நேற்று பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.


இதேபோன்று ஏலகிரி மலையிலும் ரூ.30 லட்சம் மதிப்பில் 24 மின்விளக்கு கம்பங்களை பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். அப்போது, ஜோலார்பேட்டை எம்எல்ஏ தேவராஜி, யூனியன் சேர்மன் சத்யா சதீஷ்குமார், நகராட்சி சேர்மன் காவியா விக்டர், துணைச் சேர்மன் இந்திரா பெரியதாசன், ஏலகிரி மலை பஞ்.தலைவர் ராஜஸ்ரீ கிரி வேலன்,நகர செயலாளர்கள் அன்பழகன் திமுக மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் வடிவேல்,தொழிலாளர் அணி மாவட்ட தலைவர் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/