திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேசிய தூய்மை பணியாளர் ஆணையமான சபாய் கரம்சாரிஸ் தேசிய ஆணைய தலைவர் பங்கேற்பு-துப்பரவு ஒப்பந்ததாரர்கள் வராததால் கடிந்த தலைவர். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 20 January 2024

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேசிய தூய்மை பணியாளர் ஆணையமான சபாய் கரம்சாரிஸ் தேசிய ஆணைய தலைவர் பங்கேற்பு-துப்பரவு ஒப்பந்ததாரர்கள் வராததால் கடிந்த தலைவர்.


திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக 7-வது தள கூட்டரங்கில் தேசிய தூய்மை பணியாளர் ஆணையம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கான குறை தீர்வு கூட்டம் சபாய் கரம்சாரிஸ் தேசிய ஆணைய தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைப்பெற்றது. 

இதில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, ஆதிதிராவிட நல அலுவலர் ஜெயக்குமார், மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் தேசிய தூய்மை பணியாளர் ஆணையமான சபாய் கரம்சாரிஸ் தேசிய தலைவர் வெங்கடேசன் பேசுகையில் துப்புரவு பணியாளர்களுக்கான ஆய்வுக்கூட்டதில் ஒப்பந்ததாரர்கள் ஏன் பங்கேற்கவில்லை என்றார். 


மேற்பார்வையாளர்கள் மற்றும் மேலாளர்கள் மட்டுமே பங்கேற்றனர். அதனால் தலைவர் கடிந்துக்கொண்டார்.   துப்புரவு ஒப்பந்ததாரர்களுக்கு மேலாளர் மற்றும் மேற்பார்வையாளர்களை வெளியே அனுப்பினார். அதனைத் தொடர்ந்து பேசிய தலைவர் துப்புரவு பணியாளர்களுக்கு பல்வேறு பகுதிகளில் பிரச்சனைகள் இருக்கிறது அதை களைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 


தேசிய தூய்மை பணியாளர் ஆணையந்தின் சார்பில் அரசுக்கு 3 கோரிக்கையை வைக்கிறோம். தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த முறையில் பணியாற்றுவதை தமிழக அரசு மாற்றி அமைக்க வேண்டும். பணியாளர்களுக்கு வழங்கக்கூடிய ஊதியம் ரொக்க தொகையாக வழங்கப்படுகிறது.‌ அது மாற்றப்பட வேண்டும்.  விடுமுறை நாட்களில் பணியாற்றினால் இரண்டு சம்பளம் வழங்கப்பட வேண்டும்.‌ பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். பணியாளர்களுக்கு சரியான முறையில் ஊதியம் போய் சேர்வதில்லை. 


நஷ்டத்தில் இயங்கக்கூடிய நிறுவனங்களை தான் தனியாரிடம் ஒப்படைக்கப்படுகிறது.  தூய்மை பணியாளர் ஆணையம் லாபத்தில் இயங்குகிறது. அதனால் தூய்மை பணியாளர்களுக்கு ஊதியத்தை நேரடியாக வழங்கப்படவேண்டும். கர்நாடகா மற்றும் ஆந்திராவை போன்று தூய்மை பணியாளர்களுக்கு என தனி துறை உருவாக்கி நேரடியாக பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. அதே போல் தமிழகத்தில் வழங்கப்படவேண்டும் என்றார். 


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/