பயந்து நடுங்கிய பலநாடுகள் வெல்லமுடியாமல் போக்குகாட்டிய செவ்வாய் கிரகம்! - மயில்சாமி அண்ணாதுரை மாணவர்களை ஊக்குவிக்கும் பேச்சு. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 3 January 2024

பயந்து நடுங்கிய பலநாடுகள் வெல்லமுடியாமல் போக்குகாட்டிய செவ்வாய் கிரகம்! - மயில்சாமி அண்ணாதுரை மாணவர்களை ஊக்குவிக்கும் பேச்சு.


பயந்து நடுங்கிய பலநாடுகள் வெல்லமுடியாமல் போக்குகாட்டிய செவ்வாய் கிரகம்! அச்சம் தவிர்த்து செவ்வாய் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக களம் இறங்கிய  மங்கள்யான்! இந்திய அறிவியல் புதிய சரித்திரம்! இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை மாணவர்களை ஊக்குவிக்கும் பேச்சு.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் பகுதியில் பாரதிதாசன் பொரியல் கல்லூரி அமைந்துள்ளது, இந்த கல்லூரியில் 2021 மற்றும் 2022 ஆண்டு பயின்ற மாணவ மாணவிகளுக்கு பட்டமளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக பத்மஸ்ரீ விருது பெற்ற முன்னாள் இயக்குனர் இஸ்ரோ இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டமளித்தார்.


மேலும் மாணவர்களுக்கு மத்தியில் அச்சம் தவிர் என்ற தலைப்பில் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக பேசினார், அப்போது வளர்ந்த நாடுகள் பல செவ்வாய் கிரகத்திற்க செயற்கைக்கோள்கள் அனுப்பும் முயற்சி தோல்வி தோல்வியடைந்தன இதனால் செவ்வாய் கிரகத்தை பார்த்து பயந்து நடுங்கிக் கொண்டிருந்தன.


இந்த நிலையில் அச்சம் தவிர்த்து இந்திய நாடு மங்கள்யான் செயற்கைக்கோளை  வெற்றிகரமாக செவ்வாய் சுற்றுவட்ட பாதையில் களம் இறக்கிய சம்பவம் இந்திய நாட்டின் அறிவியலின் ஒரு புதிய சரித்திரம் எனவும் அச்சம் தவிர்த்து மாணவ, மாணவிகள் எவ்வாறு பயில வேண்டும் மேலும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக பேசினார்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/