திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த முல்லை பகுதியைச் சேர்ந்த முருகேஷ் மகன் பிரவீன் குமார் (27) அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் அருள்குமார் (24) அங்கே இருவரும் திருப்பத்தூரில் உள்ள தேவ கிளாசுக்கு சென்று வருவது வழக்கம், இந்த நிலையில் அதே போல் வந்து கொண்டிருந்தனர் அப்போது திருப்பத்தூர் பயணிகளை ஏற்றுக் கொண்டு ஆலங்காயம் வரை அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது அப்போது கூடப்பட்டு அருகே பேருந்து வந்து கொண்டிருந்தபோது பள்ளி வாகனம் ஒன்று இருசக்கர வாகனத்தில் முன்பு சென்றதால் அதை முந்தி செல்ல இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர்கள் சென்றபோது நேர் எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் அறிந்த குருசிலாப்பட்டு போலீசார் விரைந்து வந்து இரண்டு வாலிபர்களின் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தியான கிளாசுக்கு சென்ற வாலிபர்கள் அரசு பேருந்தில் விபத்து ஏற்பட்டு சம்பவம் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment