ஏப்ரல் 2023 - இல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி, திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை மத்திய ஒன்றியம், அம்மையப்பன்நகர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு கட்டேரி அம்மன் ஆலயத்திற்கு திருகுடமுழுக்கு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
அவரின் கோரிக்கை ஏற்கப்பட்டு, அருள்மிகு கட்டேரி அம்மன் ஆலயத்தில் இன்று நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் க.தேவராஜி MLA அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட ஆவின் தலைவர் எஸ்.ராஜேந்திரன், மு.சட்டமன்ற உறுப்பினர்கள் T.K.ராஜா, S.நடராஜன், G.பொன்னுசாமி, R.கிருபாகரன், திமுகவை சார்ந்த ஜோலார்பேட்டை மத்திய ஒன்றிய செயலாளர் க.உமாகன்ரங்கம், ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் கே.சதிஷ்குமார், ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் கவிதாதண்டபாணி, ஜோலார்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் சத்யாசதீஷ்குமார், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் மு.க.அருள்நிதி, ஒன்றிய நிர்வாகிகள் கோபிநாதன், துளசி மணிவண்ணன், திருப்பதி, வேணுகோபால் மற்றும் கழக முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.
- செய்தியாளர் கோபிநாத்.
No comments:
Post a Comment