தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மீது கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை கண்டித்து திருப்பத்தூர் மாவட்ட பிரஸ் கிளப் சார்பில் மாவட்ட ஆட்சியர் நுழைவாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தனியார் தொலைக்காட்சி (நியூல்7 தமிழ்) செய்தியாளர் நேசபிரபு மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய குண்டர்களையும் கொலைவெறிக்கு தூண்டுதலாக இருந்த நபர்களை கைது செய்ய கோரி திருப்பத்தூர் மாவட்ட பிரஸ் கிளப் சார்பில் மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்தும் பாதுகாப்பு கேட்டும் கொடுக்காத காவல் துறையை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், இதில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர், நாட்றம்பள்ளி, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 50 க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment