கோழிக் காய்ச்சல் நோய் அனைத்து வயது கோழிகளையும் தாக்கும் தன்மை உடையது மற்றும் ஆறு வாரத்திற்கு உட்பட்ட கோழி குஞ்சுகள் அதிகம் பாதிப்புக்குள்ளாகும். கோழி காய்ச்சல் நோயின் அறிகுறிகளான கோழிகள் உடல்நலம் குன்றியும் சுறுசுறுப்பின்றியும் முறைங்க எப்படி இருக்கும் தீவனம் தண்ணீர் உட்கொள்ளாமல் இருக்கும் எச்சம் வெள்ளை நிறத்தில் அதிகம் துர்நாற்றத்துடன் காணப்படும். கோழிகளின் இரவுகள் சிலிர்த்து தலை பகுதி உழுடன் சேர்ந்து இருக்கும் கோழிக் காய்ச்சல் நோய் கோழிகளை தாக்கும் நோய்களிலே மிகவும் கொடுமையானது இந்நோய் ஏற்படுவது முன்கூட்டியே தவிர்க்கும் பொருட்டு ஆண்டுதோறும் இரு வார கோழி காய்ச்சல் தடுப்பூசி முகாமல் நடத்தப்பட்டு வருகின்றன.
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் கால்நடை பராமரிப்புத் துறை மூலமாக பிப்ரவரி மாதத்தில் இரு வார கோழி காய்ச்சல் தடுப்பூசி முகாம் நகரம் கிராமம் மற்றும் கிராமங்களில் நடத்தப்பட்டு அவ்விடங்களில் உள்ள கோழிகளுக்கு தடுப்பூசி பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல வாண்டு 56,000 கோழிகளுக்கு கோழிக் காய்ச்சல் தடுப்பூசி பணி மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது அதன்படி 01.02.2024 முதல் 14.02.2024 முடியா இரு வாரங்களுக்கு தடுப்பூசி பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அது சமயம் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் கிராமப்புறங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்களுக்கு எட்டு வாரம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுடைய கோழிகளை கொண்டு சென்று கோழி காய்ச்சல் தடுப்பூசி போட்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. க தர்பகராஜ்.இ. ஆ. ப அவர்கள் தெரிவித்துள்ளார்.
- மாவட்ட செய்தியாளர் மோ அண்ணாமலை.

No comments:
Post a Comment