10,11 மற்றும் 12 பயிலும் மாணவர்களுக்கு காலை மற்றும் மாலை சிறப்பு வகுப்புகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் சென்று ஆய்வு திடீர் செய்தார். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 3 February 2024

10,11 மற்றும் 12 பயிலும் மாணவர்களுக்கு காலை மற்றும் மாலை சிறப்பு வகுப்புகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் சென்று ஆய்வு திடீர் செய்தார்.


திருப்பத்தூர் ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர், ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் அறிவுருத்தலின்படி பள்ளி கல்வித்துறையின்  சார்பில் 10,11 மற்றும் 12 பயிலும் மாணவர்களுக்கு காலை மற்றும் மாலை சிறப்பு வகுப்புகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் சென்று ஆய்வு  திடீர் செய்தார்.


திருப்பத்தூர் ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் , ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் அறிவுருத்தலின்படி பள்ளி கல்வித்துறையின்  சார்பில் 10,11 மற்றும் 12 பயிலும் மாணவர்களுக்கு காலை மற்றும் மாலை சிறப்பு வகுப்புகளை மாவட்ட ஆட்சியர் திரு. தர்ப்பகராஜ் இ.ஆ. ப.அவர்கள் நேரில் சென்று ஆய்வு  திடீர் செய்தார். இந்த ஆய்வின் போது நீண்டகால விடுப்பில் உள்ளவர்களின் மாணவர்களின் வருகை பதிவேடு மற்றும் மதிப்பெண் பதிவேடுகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு செய்தார், மேலும் நீண்ட காலமாக விடுப்பில் உள்ள மாணவிகளின் தொலைபேசி எண் ஏன் பதியப்படவில்லை என்று கேள்வி கேட்டார், அவர்களின் தொலைபேசி எண்களை தயாரித்து அதன் விவரத்தை மாவட்ட கல்வி அலுவலரிடம் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவிட்டார்.


மாவட்ட கல்வி  அலுவலர் அவர்களிடம் ஒரு வார காலத்திற்குள் அவர்களின் தாய் தந்தைகளிடம் பேசி அவர்களை பள்ளிக்கு வர  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார், அதன் தொடர்ச்சியாக திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாலை நேர வகுப்பு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதில் மாணவர்கள் வருகை பதிவேட்டு படி 38 மாணவர்கள் வருகை உள்ள நிலையில் தற்போது  30 மாணவர்கள் மட்டும் படித்து வந்துள்ளனர், ஏன் மீதமுள்ள 8 மாணவர்கள் இல்லை என சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் கேட்டு. மேலும் இது போன்ற தவறுகள் நடைபெறாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.


மேலும் இது போன்ற திருப்பத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் திரு. தர்ப்பகராஜ் இ. ஆ. ப.அவர்கள் எச்சரித்தார், இந்த ஆய்வுகளின் போது முதன்மை கல்வி அலுவலர் திரு. முனி சுப்ராயன் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மட்டும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad

*/