புதிய கட்சி தொடங்கிய நடிகர் விஜய் திருப்பத்தூரில் ரசிகர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம்! வருங்கால முதல்வர் என முழக்கங்கள் எழுப்பி கொண்டாட்டம். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 2 February 2024

புதிய கட்சி தொடங்கிய நடிகர் விஜய் திருப்பத்தூரில் ரசிகர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம்! வருங்கால முதல்வர் என முழக்கங்கள் எழுப்பி கொண்டாட்டம்.


திரைப்பட நடிகர் விஜய் அரசியலுக்கு வருதன் நோக்கமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி வந்தார். இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாக தமிழக வெற்றி கழகம் என கட்சியின் பெயரை அறிவித்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ரசிகர்கள் கொண்டாடத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் புதுப்பேட்டை ரோடு பகுதியில் மாவட்ட இளைஞரணி தலைவர் நவீன் குமார் தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்ட விஜய் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர், அதேபோல அந்த வழியாக வந்த பேருந்தை நிறுத்தி பேருந்தில் உள்ள பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். மேலும் சுமார் அரை கிலோ மீட்டர் வரை தளபதி வாழ்க! வருங்கால முதல்வர் வாழ்க என முழக்கங்கள் எழுப்பி   ஊர்வலமாக சென்றனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/