திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் ESI மருத்துவ சேவை வசதி செய்து தர மனு. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 27 February 2024

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் ESI மருத்துவ சேவை வசதி செய்து தர மனு.


திருப்பத்தூர் மாவட்டம் தோழி FEDERATION  தமிழ் நாடு தலைவர் சரஸ்வதி, சேஞ்ச்  தொண்டு நிறுவன நிறுவனர்   பழனிவேல்சாமி, தோழி கூட்டமைப்பு தமிழ்நாடு நிர்வாக குழு உறுப்பினர் சங்கர்,  தோழி Pederation செயலாளர் சரவணன் ஹாப்ஸ் தொண்டு நிறுவன நிர்வாக இயக்குநர் உஷா, தோழி பெண் தொழிலாளர்கள் நல சங்க தலைவர் ஜெயலட்சுமி,  ஐசிபிடி தொண்டு நிறுவன இயக்குனர் ஆனந்தி,நரியனேரி சரஸ்வதி கால்நடை விவசாயிகள் உற்பத்தியாளர்கள் கம்பெனி லிமிடெட் CEO ஐயப்பன் மற்றும்  வாய்ஸ் தொண்டு நிறுவன இயக்குநர் மைதிலி இணைந்து  திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள  ஆம்பூர் ESI கிளை மேலாளர்  தென்னரசு அவர்களிடம், திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் ESI மருத்துவ சேவை வசதி செய்து தர கோரி மனு கொடுக்கப்பட்டது. 


இதில் கந்திலி, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, ஆலங்காயம் , நாட்றம்பள்ளி  ஒன்றியங்களில் 911 சிறு மற்றும் பெரிய  கம்பெனிகள்   உள்ளது. இங்கு தோல் மற்றும் தோல் சார்ந்த தொழிற்சாலைகள் உள்ளதால் அந்த கம்பெனிகளில் அதிகமான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக பணி செய்து வருகின்றனர். மேலும் ஜூஸ் கம்பெனிகள், அகர்பத்தி தயாரிப்பு கம்பெனிகள், பெரிய துணிக்கடைகள், நகை கடைகள், மால்கள்  மற்றும் சிறு கடைகளில் 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பணியாற்றி வருகின்றார்கள். இவர்களும், இவர்கள் குடும்பத்தை சோர்ந்தவர்களுக்கும் அடிக்கடி உடல் நலம் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் பரிசோதனைகளுக்கு இவர்கள் தனியார் மருத்துவமனைக்கு சென்று ரூ 5,000 முதல் ரூ5 லட்சம் வரை செலவு செய்கிறார்கள்.


குறிப்பாக தோல் மற்றும் தோல் சார்ந்த தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களுக்கு அதிகமாக வேதிப்பொருட்கள் பயன்படுத்துவதன் மூலம்  பல்வேறு வகையான உடல்நலக் கோளாறுகளால் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் இதிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள இங்குள்ள தொழிலாளர்களுக்கு ESI மருத்துவ வசதி கட்டாயமாகிறது.
ஆம்பூர் தாலுக்காவை தவிர மற்ற இடங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு தற்போது வரை இந்த ESI மருத்துவ வசதி செய்து தரப்படவில்லை. 


எனவே திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அணைத்து தாலுக்காவிலும் ESI மருத்துவ வசதி ஏற்படுத்தி அணைத்து தொழிலாளர்களையும் ESI மருத்துவ வசதிக்கு கீழ் கொண்டு வரவேண்டும்.  தோல் தொழிற்சாலையினால் ஏற்படும் தொழில் சார்த்த நோய்களுக்கு சிகிச்சை அளிக்க தீர்வு காணவேண்டும்.  100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை ஒன்றை திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏற்படுத்த வேண்டும் என்றும் தாழ்மையுடன் கேட்டு கொள்கின்றோம். என அதில் குறுப்பிட்டு இருந்தது.


= மாவட்ட செய்தியாளர். மோ. அண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad

*/