தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் திருப்பத்தூர் மாவட்ட அலுவலக நுழைவாயில் முன்பு வருவாய்த்துறை ஊழியர்கள் 10அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாம் கட்டமாக அலுவலக வாயலில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 26 February 2024

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் திருப்பத்தூர் மாவட்ட அலுவலக நுழைவாயில் முன்பு வருவாய்த்துறை ஊழியர்கள் 10அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாம் கட்டமாக அலுவலக வாயலில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.


தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் திருப்பத்தூர் மாவட்ட அலுவலக நுழைவாயில் முன்பு வருவாய்த்துறை ஊழியர்கள் 10அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாம் கட்டமாக அலுவலக வாயலில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

தமிழகம் முழுவதும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர், திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு   வருவாய்த்துறை ஊழியர்கள் 20க்கும் மேற்பட்டோர்  இரண்டாம் கட்ட போராட்டமாக பத்து அம்ச கோரிக்கைகளை அனைத்துப பணிகளையும் புறக்கணித்து அலுவலக வாயிலில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.


இதில் முக்கிய கோரிக்கைகளாக 

  1. அலுவலக உதவியாளர் காலிப் பணியிடங்கள் நிரப்புதல்
  2. துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்க பாதுகாப்பு அரசாணையுடன் வெளியிட வேண்டும் 
  3. இளநிலை வருவாய் ஆய்வாளர் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணையின் அடிப்படையில் விதித்திருத்த ஆணையினை உடன் வெளியிட வேண்டும்
  4. 2024 பாராளுமன்றத் தேர்தல் பணிகளை தோல்வின்றி மேற்கொள்ள முழுமையான நிதி ஒதுக்கீட்டினை வழங்கிட வேண்டும் 
  5. அனைத்து வட்டங்களிலும் சான்றிதழ் வழங்கும் பணிக்கென புதிய துணை வட்டாட்சியர் பணியிடங்களை உடனடியாக ஏற்படுத்திட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து பணிகளையும் புறக்கணித்து அலுவலக வாயிலில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.


மேலும் அடுத்த கட்டமாக வருகின்ற நாளை  27ஆம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் எச்சரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/