எர்ரம்பட்டி பகுதியில் நியாயவிலை கடை திறந்து வைத்த எம்எல்ஏ. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 7 February 2024

எர்ரம்பட்டி பகுதியில் நியாயவிலை கடை திறந்து வைத்த எம்எல்ஏ.


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த காக்கங்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு காக்கங்கரை கடன் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் கோல்கானுர் முழு நியாய விலை கடை 556 குடும்ப அட்டைகளுடன்  செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் எர்ரம்பட்டி பகுதி மக்கள் இக்கடையில் இருந்து மூன்று கிலோ மீட்டருக்கு அதிகமான தொலைவில் வந்து பொருட்களை வாங்கி செல்வதில் சிரமம் ஏற்படுவதாகவும் அதன் காரணமாக தங்கள் பகுதிக்கு நியாய விலை கடை வேண்டும் என  திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பிடம் கோரிக்கை வைத்தனர்.


அதன் காரணமாக அதன் கோரிக்கையை ஏற்றுக் சட்டமன்ற உறுப்பினர் நல்ல தம்பி கோல்கானுர் முழு நேர நியாய விலை கடையில் இருந்து பிரித்து எர்ரம்பட்டி பகுதியில் பகுதி நேர நியாய விலை கடையை சட்டமன்ற உறுப்பினர் நல்ல தம்பி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். 


மேலும் எர்ரம்பட்டி பகுதியில் உள்ள 232 குடும்ப அட்டைகளைப் பிரித்து பகுதிநேர நியாய விலை கடையாக இன்று திறக்கப்பட்டுள்ளது. அப்போது பேசிய சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி வருகின்ற நாடாளுமன்ற  தேர்தலில் 40 தொகுதிகளிலும் 100% திமுக வெற்றி பெறும் என பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. நியாய விலைக் கடை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள். முருகேசன் ஆத்மா குழு தலைவர். கந்திலி குழு தலைவர் திருமதி திருமுருகன். ஒன்றிய குழு துணை தலைவர் மோகன். மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணி. ஒன்றிய குழு திருப்பதி. ஊராட்சி மன்ற தலைவர் முருகம்மாள் வேலு. ராஜேந்திரன் திமுக கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள். பல நிகழ்ச்சிகள் கலந்து கொண்டனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/