ஏலகிரிமலையில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்தில் கண்டக்டராக ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி மாறி டிக்கெட் டிக்கெட் டிக்கெட் என்றதால் பயணிகள் இடையில் சிரிப்பலை. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 17 March 2024

ஏலகிரிமலையில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்தில் கண்டக்டராக ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி மாறி டிக்கெட் டிக்கெட் டிக்கெட் என்றதால் பயணிகள் இடையில் சிரிப்பலை.


திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளமான ஏலகிரிமலையில் 14 பெரிய கிராமங்கள் உள்ளடக்கி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் மலை கிராமப் பகுதிகளில் இருந்து மருத்துவம், அரசு அலுவலகம் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக நாள்தோறும் நூற்றுக்கணக்கான பெண்கள் திருப்பத்தூர் நகர பகுதிக்கு சென்று வருகின்றனர். மலை கிராம மக்கள் சென்று வர அரசின் சார்பில் 3 பேருந்துகள் இயங்கி வருகிறது. 

அரசு பேருந்துகள் இயங்கினாலும் இவர்களுக்கு தமிழகத்தில் மற்ற நகர்ப்புற பகுதிகளில் இயக்கப்படும் மகளிருக்கான இலவச பேருந்து இல்லாமல் இருந்த நிலையில் எங்களுக்கும் மகளிர் இலவச பேருந்து வசதி வேண்டும் என்று கோரிக்கை வைத்ததின் பேரில் ஏலகிரி மலை அத்தனாவூரில் இருந்து  திருப்பத்தூர், ஜோலார்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு மகளிருக்கான இலவச பேருந்து சேவையை நேற்று துவங்கப்பட்டது.


இதில் சிறப்பு அழைப்பாளராக ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜி கலந்து கொண்டு பேருந்து கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் பேருந்தில் ஒட்டுனராகவும், கண்டக்டர் ஆக மாறி பெண்களுக்கான இலவச பயண சீட்டை வழங்கி இது ஏலகிரி மலையின் கட்டணமில்லா பேருந்துங்க, இலவச டிக்கெட், டிக்கெட் டிக்கெட் என பேருந்தில் பயணம் செய்த மகளிருக்கு இலவச பேருந்து சீட்டை வழங்கினார். இதனால் மலை கிராமத்தில் உள்ள பெண்கள் மிகுந்த சந்தோசத்துடன் பயணம் செய்தனர். நிகழ்ச்சியில் ஒன்றிய குழு உறுப்பினர்கள், போக்குவரத்துத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.


- செய்தியாளர் கோபிநாத். 

No comments:

Post a Comment

Post Top Ad

*/