திருப்பத்தூர் தொடக்கக்கல்வி மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு ஆறு மாத காலமாக சம்பளம் வழங்காததை கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தலமை ஆசிரியர்கள். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 21 March 2024

திருப்பத்தூர் தொடக்கக்கல்வி மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு ஆறு மாத காலமாக சம்பளம் வழங்காததை கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தலமை ஆசிரியர்கள்.


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் அமைந்துள்ள தொடக்கக்கல்வி மாவட்ட கல்வி அலுவலகத்தில்  சிறுபான்மை அரசு நிதி உதவி பெறும் IELC தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களான ஜேயேசு பாதம் மற்றும் கிரேஸ் அமுதா செல்வி, குளோரி பிரேம குமாரி, ஆகியோர் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக ஐந்து இருக்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள் உள்ளிருப்பு  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களின் முக்கிய கோரிக்கைகளாக IELC நிர்வாகம் இடைநிலை ஆசிரியர்களை கடந்த 11.9.23 அன்று பதவி உயர்வு  வழங்கி தலைமை ஆசிரியர்களாக நியமித்து உள்ளது. ஆனால் இதுவரை தலைமை ஆசிரியர்களுக்கான ஊதியம் மற்றும் அதே போல் இதற்கு முன்பு இருந்த இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதியம் வழங்காமலும் ஆறு மாத காலமாக வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் மெத்தனம் காட்டி காலம் தாழ்த்தி வரும் மாவட்ட கல்வி அலுவலர்களை கண்டித்து மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/