ஏலகிரி மலையில் படகு இல்லத்தில் பாராளுமன்ற பொது தேர்தல் குறித்து வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி! பாரம்பரிய நடனமாடி கலெக்டரை வரவேற்ற மலைவாழ் மக்கள்!. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 23 March 2024

ஏலகிரி மலையில் படகு இல்லத்தில் பாராளுமன்ற பொது தேர்தல் குறித்து வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி! பாரம்பரிய நடனமாடி கலெக்டரை வரவேற்ற மலைவாழ் மக்கள்!.


திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை படகு இல்லத்தில் வருகின்ற பாராளுமன்ற பொது தேர்தல் 2024 முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் வாக்காளர்  விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது ஏலகிரி மலைவாழ் மக்கள் தங்களுடைய பாரம்பரிய நடனமாடி சேவ ஆட்டத்தை ஆடி வரவேற்றனர். அதன் பின்னர் அங்கிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் அளவில்  வாக்களிப்பது உங்கள் உரிமை மற்றும் கடமை என்று  வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். மேலும் படகு இல்லத்தில் உள்ள கடைக்காரர்களுக்கு 100% வாக்கு அளிக்க வேண்டும் என்ற  விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களை  வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தேர்தல் பிரிவு அதிகாரிகள் மற்றும் மலைவாழ் மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/