சுமார் 10 சவரன் தங்க நகை, 600 கிராம் வெள்ளி பொருட்கள், 5500 பணம் இருந்த நிலையில் இரவு நேரத்தில் வீடு புகுந்த மர்ம நபர் வீட்டில் இருந்த கட்டிலின் மெத்தையின் கீழ் மறைத்து வைத்திருந்த பீரோ சாவியை எடுத்து பீரோவை திறந்து அதில் இருந்த நகைகள் மற்றும் பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளான்.
மல்லிகா சற்று வாய் பேச முடியாத முடியாதவர் என்பதால் அவரது கணவரின் தங்கை கோவிந்தம்மாள் கந்திலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் ஏற்கனவே ஆறு மாதத்திற்கு முன்பு அதே பகுதியில் திருட்டு நடந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் வீட்டில் மல்லிகா மற்றும் மல்லிகாவின் மாமியார் உண்ணாமலை ஆகியோர் வீட்டில் இருந்தபொழுது இந்த திருட்டு சம்பவம் நடைபெற்று இருப்பதால் உண்மையிலே வெளிநபர்கள் எவரினும் திருடி சென்றார்களா அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு கோணங்களில் கந்திலி போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment