வேட்டப்பட்டு ஊராட்சியில் நியாய விலைக் கடை கட்டத்தை ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி திறந்துவைத்தார். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 8 March 2024

வேட்டப்பட்டு ஊராட்சியில் நியாய விலைக் கடை கட்டத்தை ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி திறந்துவைத்தார்.


திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி, ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றியம், வேட்டப்பட்டு ஊராட்சியில், ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட நியாய விலைக் கடை கட்டத்தை ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி, ரிப்பன் வெட்டி திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். 

முன்னதாக வேட்டபட்டு ஊராட்சி, வட்டக்கொல்லை பகுதியில் புதிய பகுதி நேர நியாய விலை கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் திமுகவின் ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் கே.சதிஷ்குமார், ஜோலார்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் சத்யாசதீஷ்குமார், ஒன்றிய கவுன்சிலர் செல்விசாந்தன், ஊராட்சிமன்ற தலைவர் அனுமந்தன், கூட்டுறவு சார்பதிவாளர் பூவண்ணன் மற்றும் அரசு துறை அதிகாரிகள், நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/