400க்கும் மேற்பட்ட விருதுகள் பெற்று சாதனை! நல்லாசிரியர் விருது பெற்ற தலைமையாசிரியர்! இது பள்ளியா? அல்லது கோயிலா? கலைநயத்துடன் தனியார் பள்ளிக்கு நிகராக விளங்கும் அரசு பள்ளி!. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 7 March 2024

400க்கும் மேற்பட்ட விருதுகள் பெற்று சாதனை! நல்லாசிரியர் விருது பெற்ற தலைமையாசிரியர்! இது பள்ளியா? அல்லது கோயிலா? கலைநயத்துடன் தனியார் பள்ளிக்கு நிகராக விளங்கும் அரசு பள்ளி!.


திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட இராஜாவூர் ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது, இப்பள்ளிக்கு கடந்த 2008ஆம் ஆண்டு  தலைமை ஆசிரியராக பொறுப்பேற்று வந்தவர் இந்திரா தலைமை ஆசிரியர் இந்திரா பொறுப்பேற்று வந்தபோது இந்த பள்ளியில் 20க்கும் குறைவான மாணவ மாணவிகளே பயின்று வந்தனர். எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாமல் இருந்து வந்தது இதனை மனதின் கொண்ட இந்திரா ஆசிரியர் சிறிது சிறிதாக தன்னுடைய சொந்த பணத்திலிருந்து பள்ளிக்கு சுற்றுச்சுவர்  கட்டுவது, வகுப்பறை டைல்ஸ் போடுவது என ஆரம்பித்தார்.

அதன் பள்ளியில் கழிப்பறைகள், குடிநீர் சுத்திகரிப்பு கருவி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தினார் அதன் பின்பு அதே பள்ளியில் சுமார் 300க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளையும் வைத்தார். இதன் காரணமாக சுற்றுவட்டார பகுதிகளின் மாணவ மாணவிகளின் பெற்றோர்களின் நன்மதிப்பையும் பெற்றார்.


மேலும் இப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் தனியார் பள்ளியின் மாணவ மாணவிகளை விட பல்வேறு திறமைகளிலும் ஒழுக்கத்திலும் திகழ்ந்து விளங்குகின்றனர், மேலும் ஏதாவது ஒரு அரசு நிகழ்ச்சி என்றால் இப்பள்ளியிலிருந்து பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி, நடன போட்டி, சிலம்பம், என பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை தட்டிச் செல்கின்றனர் இதற்கு முழு காரணம் தலைமையாசிரியர் இந்திரா ஆவார்.


இதன் காரணமாக இப்பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு அரசு  நல்ல ஆசிரியர் விருது வழங்கி கௌரிவித்தது, மேலும் கஜா புயல், கொரானா என பல்வேறு இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும் போதும் பொதுமக்களுக்கு முதல் நிவாரண நிதியாக இப்பள்ளியின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் இந்திரா தனது பள்ளியில் படிக்கும் மிகவும் ஏழ்மையான மாணவிகளுக்கு தன்னுடைய சொந்த பணத்தில் இருந்து 50 ரூபாய் மாதந்தோறும் அஞ்சலகத்தில் அவர்களுடைய பெயரில் சேமித்து வருகிறார்.


மேலும் இப்ப பள்ளியில் பயின்று ஐந்தாம் வகுப்பு முடித்து பின்பு வெளியில் செல்லும் ஆவமானவைகள் தலைமையாசிரியை கட்டியணைத்து முத்தமிட்டு இந்த பள்ளியை விட்டு செல்ல மாட்டேன் என கதறும் சம்பவமும் அரங்கேறியுள்ளது அதேபோல் இப்பள்ளியில் முதல் வகுப்பு சேரும் மாணவ மாணவிகளை கிரீடம் அணிவித்து மாலை அணிவித்து மரியாதையுடன் ஊர்வலமாக அழைத்து வந்து பள்ளியில் சேர்க்கும் நிகழ்வும் அரங்கேறுவது வழக்கம்.


இதன் காரணமாக  அரசு சார்பில் மூன்று விருதுகளும் தனியார் துறை சார்பில் 400க்கும் மேற்பட்ட விருதுகளும் தலைமை ஆசிரியர் இந்திராவுக்கு வழங்கி கௌரவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நல்லாசிரியர் விருது பெற்ற இந்திரா  தனது பள்ளியை மென்மேலும் உயர்த்த வழிவகை செய்துள்ளார் இதன் காரணமாக பள்ளியை கோயில் போல வைத்துள்ளார் மற்ற பள்ளிகளை போல் இல்லாமல் தனக்கு பிடித்த மாதிரி கலைநயத்துடன் வரைபடங்களை வரைந்து மாணவர்களை கவரும் வண்ணத்தில் வைத்துள்ளார்.


மேலும் திடீரெனப் பள்ளிக்கு செல்லும் அதிகாரிகள் இது பள்ளியா அல்லது கோயிலா என்று பிரமிக்கும் வைக்கும் அளவில் இப்பள்ளி அமைந்துள்ளது. மேலும் தற்போது கூட சில தினங்களுக்கு முன்பு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களிடம் சில தினங்களுக்கு முன்பு அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருதும் பெற்றுள்ளார். அதனை தொடர்ந்து இப்பகுதி மக்கள் இந்தப் பள்ளிக்கு தலைமையாசிரியர் இந்திராவால் இராஜாவூர் என்ற ஊர் இருக்கிறது என்று தெரிகிறது எனவும் இப்பள்ளியிலிருந்து தலைமை ஆசிரியரை வேறு இடத்திற்கு மாற்ற கூடாது இவரே இருக்க வேண்டும் கோரிக்கை வைக்கின்றனர்


மேலும் இவருடைய சீரிய முயற்சியின் காரணமாக தற்போது 95க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பள்ளியில் பயின்று வருவது குறிப்பிடத்தக்கது.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad

*/