திருப்பத்தூர் மாவட்டத்தில் 106 பதட்டமான வாக்குச்சாவடிகளை கண்டறியப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட வருகிறது என எஸ்பி பேட்டி. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 18 April 2024

திருப்பத்தூர் மாவட்டத்தில் 106 பதட்டமான வாக்குச்சாவடிகளை கண்டறியப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட வருகிறது என எஸ்பி பேட்டி.


திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் கிராமத்தில் உள்ள திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில்  திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், நாளை நடைபெற உள்ள  நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் திருப்பத்தூர் மாவட்டத்தில் 106  பதற்றமான வாக்குசாவடிகளை கண்டறியப்பட்டு அதற்கு உண்டான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை குறித்தும்  திருப்பத்தூர் மாவட்ட போலீசாரிடம் கேட்டறிந்தார்.

மேலும் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒவ்வொரு வாக்கு சாவடிகளில் ஒரு போலீசார் இருக்க வேண்டும். வாக்குச்சாவடியில் இருந்து 100 அடி மற்றும் 200 அடிகளுக்கு கோடுகள் வரையப்பட்டுள்ளதா எனவும் கண்காணிக்க வேண்டும். பதட்டமான வாக்குச்சாவடிகளின் கூடுதல் போலீசாரை பணியமர்த்தி கண்காணிக்க வேண்டும். விடுதிகள் மற்றும் திருமண மண்டபத்தில்  சந்தேகத்துக்குரிய வகையில் வெளி நபர்கள் எவரேனும் தங்கி உள்ளனராக என கண்டறிய வேண்டும் என கூறினார்.

 

இந்த நிகழ்வில் திருப்பத்தூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், மற்றும் உதவி காவல் ஆய்வாளர்கள்  கலந்து கொண்டனர்.


- செய்தியாளர் கோபிநாத். 

No comments:

Post a Comment

Post Top Ad

*/