பெரியகண்ணாலப்பட்டி பகுதியில் வீட்டுக்குள் புகுந்து ஒரு லட்ச ரூபாய் பணம் மற்றும் 4 சவரன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருட்டு! மர்ம நபர் கைவரிசை. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 27 April 2024

பெரியகண்ணாலப்பட்டி பகுதியில் வீட்டுக்குள் புகுந்து ஒரு லட்ச ரூபாய் பணம் மற்றும் 4 சவரன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருட்டு! மர்ம நபர் கைவரிசை.


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பெரியகண்ணாலப்பட்டி பகுதியை சேர்ந்த மாசிலாமணி மகன் மகேஷ் (38) சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார் இவருக்கு சத்யா என்ற பெண்ணுடன் திருமணமாகி இரண்டு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் நேற்று இரவு 12 மணி அளவில் வீட்டில் அதிக உஷ்ணம் காரணமாக வீட்டுக்கு வெளியே வந்து மகேஷ் மற்றும் அவருடைய குடும்பத்தினர் வெளியே தூங்கி உள்ளனர்.

இதனை அறிந்த மர்ம நபர் வீட்டில் உள்ளே புகுந்து பீரோவில் குழந்தையின் அறுவை சிகிச்சைக்காக வைக்கப்பட்டிருந்த ஒரு லட்ச ரூபாய் பணம் மற்றும் நான்கு சவரன் தங்க நகை மற்றும் 3 ஜோடி வெள்ளி கொலுசுகள் மற்றும் குழைந்தையின் அரைநான் கொடி  ஆகியவற்றை ஆகியவற்றை மர்ம நபர் திருடி சென்றுள்ளனர்.


திருடு போனதை அறி மகேஷ் இந்த சம்பவம் குறித்து கந்திலி போலீசாருக்கு தகவல் தெரிவித்ததின்  பேரில் கந்திலி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர் மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அதே பகுதியில் பிரகாசம் என்பவரின் வீட்டிலும் மர்மநபர்கள் சுவர் ஏறி குதித்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்  அப்போது நாய் குறைத்ததன் காரணமாக அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/