திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த அட்வகேட் ராமநாதன் தெரு பகுதியில் சுமார் 500 வருடங்களுக்கு முன்பு பழமை வாய்ந்த சுயம்பு வடிவிலான விநாயகர் கோயில் அமைந்து இருந்தது. இதனை சுமார் 150 வருடங்களுக்கு முன்பு சுயம்பு வடிவிலான விநாயகரை எடுத்துவிட்டு சிறிய கோவில் கட்டி புதிய விநாயகர் சிலையை வைத்து வழிபட்டு வந்தனர் இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு கோவில் பழுந்தடைந்துள்ளதாக கூறி ஊர் பொதுமக்கள் அதனை இடித்து புதிய கோயிலில் அமைக்க வழிவகை செய்தனர்.
ஆனால் இந்த கோவில் அமைந்துள்ள இடம் தனக்கு சொந்தம் என கூறி அதே பகுதியைச் சேர்ந்த யுவராஜ் என்பவர் கோவில் கட்ட தடை செய்ய வேண்டும் எனக் கூறி வழக்கு தொடர்ந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக கோவில் டிரஸ்டினர் மற்றும் ஊர் பொதுமக்கள் ஒன்றிணைந்து கோவில் கட்ட வழிவகை செய்ய ஏற்பாடு செய்து இருந்த நிலையில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. எனவே அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment