சுந்தரம்பள்ளி அருகே ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பங்கள். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 22 April 2024

சுந்தரம்பள்ளி அருகே ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பங்கள்.


திருப்பத்தூர் மாவட்டம் சுந்தரம்பள்ளி மின் பகிர்மான நிலையத்துக்கு சொந்தமான காக்காங்கரை பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியான சின்ராஜ் வட்டத்தில் பழுதடைந்த, மற்றும் மேல்நிலை நீர் தேக்கத்தொட்டிக்கு அருகாமையில் அமைந்துள்ள  மின் கம்பம் மற்றும் நத்தம் பஞ்சாயத்துக்கு சம்பந்தப்பட்ட  நூலகம் எதிரே மிகவும் பழுதான நிலையில் ஒரு மின்கம்பம்  இந்த மின் கம்பங்கள் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.
 

இந்த சாலை ஊரின் பிரதான சாலையாகும். இந்தசாலை வழியே பொதுமக்களும், சுமார் 50 க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகளும் பள்ளிக்கு சென்று வருகின்றனர். மேலும் இந்த வழியாகத்தான் பள்ளி வேன் உட்பட்ட அனைத்து வாகனங்களும் சென்று வர வேண்டும்.   ஏதேனும் அசம்பாவிதம் நடப்பதற்கு முன்னதாக புதிய மின் கம்பங்களை மாற்றி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊர் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் இந்தப் மின் பகிர்மான  நிலையத்துக்கு சம்பந்தப்பட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள மின்கம்பங்களை கள ஆய்வு மேற்கொண்டு அதனை மாற்ற வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


 -மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/