திருப்பத்தூரில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு 1000 நபர்களுக்கு உணவு வழங்கி அசத்திய தமிழக வெற்றிக் கழகத்தினர். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 28 May 2024

திருப்பத்தூரில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு 1000 நபர்களுக்கு உணவு வழங்கி அசத்திய தமிழக வெற்றிக் கழகத்தினர்.

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்குமாறு நடிகர் விஜய் தனது ரசிகர்களை கேட்டுக்கொண்டுள்ளார். அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும், அண்டை மாநிலங்களிலும் தமிழக வெற்றி கழகம் சார்பில் இலவச மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மாயப்பிள்ளையார் கோவில் தெரு மற்றும் திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையம், கோட்டை தெரு  பகுதிகளில்  திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பில்  திருப்பத்தூர் மாவட்ட இளைஞர் அணி தலைவர் நவீன் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது.


இதில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை சுமார் 1000க்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவுகள் வழங்கப்பட்டது. இதில் தமிழக வெற்றி கழகத்தின்  மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


- மாவட்ட செய்தியாளர்  மே.அண்ணாமலை

No comments:

Post a Comment

Post Top Ad

*/