பள்ளி வாகனத்தின் பின்புறம் விளம்பரங்கள் வைக்க கூடாது என பள்ளி தாளாளர்களுக்கு டோஸ் விட்ட கலெக்டர்!* - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 10 May 2024

பள்ளி வாகனத்தின் பின்புறம் விளம்பரங்கள் வைக்க கூடாது என பள்ளி தாளாளர்களுக்கு டோஸ் விட்ட கலெக்டர்!*

*ஆதியூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பள்ளி வாகனங்கள் வருடாந்திர கூட்டாய்வு கூட்டம்!பள்ளி வாகனங்களை கலெக்டர் ஆய்வு! பள்ளி வாகனத்தின் பின்புறம் விளம்பரங்கள் வைக்க கூடாது என பள்ளி தாளாளர்களுக்கு டோஸ் விட்ட கலெக்டர்!*


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் பகுதியில் உள்ள விஜய் வித்யாலயா தனியார் பள்ளியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில் பள்ளி வாகனங்கள் வருடாந்திர கூட்டம் நடைபெற்றது. அதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் சுமார் 559 தனியார் பள்ளிகள் திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட அனைத்து வாகனங்களும் இந்த ஆண்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.


அதில் வாகனங்கள் மஞ்சள் நிறத்தில் பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளதா, பள்ளி முத்திரை பதிக்கப்பட்டுள்ளதா, கிரில் சரியாக இருக்கின்றதா, அவசர வழி முறைப்படி இருக்கின்றதா, தீயணைப்பு கருவி காலாவதியாகாமல் இருக்கின்றதா, முதல் உதவி பெட்டி வாகனத்தில் இருக்கின்றதா போன்ற பல்வேறு ஆய்வுகள் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் ஆய்வு மேற்கொண்டார்.


அப்போது பள்ளியின் வாகனத்தின் பின்புறம் பள்ளியின் விளம்பர பலகை இருந்ததால் சாதனை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் இப்படி விளம்பரம் இருந்தால் ஓட்டுனர் எப்படி சரியாக வாகனத்தை இயக்க முடியும் இதனால் விபத்துக்கள் நேரிடமும் வாய்ப்புள்ளது என பள்ளியின் தாளவறை அழைத்து டோஸ் கலெக்டர் ரோஸ் விட்டார். காரணமாக பள்ளியின் வாகன ஓட்டுனர்கள் கைதட்டி கலெக்டரை ஆரவாரப்படுத்தினர்.


இந்த ஆய்வுகளில் வருவாய் கோட்டாட்சியர் ராஜசேகர்,வட்டார போக்குவரத்து அலுவலர் காளியப்பன், போக்குவரத்து ஆய்வாளர் விஜயகுமார்,தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் முருகன் தனியார் பள்ளி வாசல் ஓட்டுனர் என பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்.
கோபிநாத் 

No comments:

Post a Comment

Post Top Ad

*/