திருப்பத்தூர் மாவட்ட கார் வியாபாரிகள் மற்றும் ஆலோசர்கள் நல சங்கம் சார்பில் பிரவு-430-ன் என் உரிமையாளரின் ஒப்புகை பெற்ற இரண்டு ரூபாய் கோர்ட்டு முத்திரைத்தாள் மூலம் நேரடியாக பதிவு சான்றிதழ் பெற கோரிக்கை மனு திருப்பத்தூர் மோட்டார் போக்குவரத்து அலுவலரிடம் வழங்கப்பட்டது. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 10 May 2024

திருப்பத்தூர் மாவட்ட கார் வியாபாரிகள் மற்றும் ஆலோசர்கள் நல சங்கம் சார்பில் பிரவு-430-ன் என் உரிமையாளரின் ஒப்புகை பெற்ற இரண்டு ரூபாய் கோர்ட்டு முத்திரைத்தாள் மூலம் நேரடியாக பதிவு சான்றிதழ் பெற கோரிக்கை மனு திருப்பத்தூர் மோட்டார் போக்குவரத்து அலுவலரிடம் வழங்கப்பட்டது.


தமிழ்நாடு கார் வியாபாரிகள் மற்றும் ஆலோசரின் நல கூட்டமைப்பில் இணைந்த திருப்பத்தூர் மாவட்ட கார் வியாபாரிகள் மற்றும் ஆலோசகர் நல சங்கத்தினர் சுமார் 150-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ஒன்றிணைந்து திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த எலவம்பட்டி பகுதியில் அமைந்துள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பட்டார போக்குவரத்து அலுவலர் காளியப்பன் அவர்களிடம் மாவட்டத் தலைவர் ராஜ்குமார் தலைமையில் மனு ஒன்றை அளித்தனர்.


அந்த சமீபத்தில் மோட்டார வாகன ஆணையரின் அறிவிப்பால் கார் வியாபாரிகளின் வாழ்வாதரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது அதன் காரணமாக ஆணையர் அறிவித்த அதாவது காரின் உரிமையாளரிடம் இருந்து கடன் ரத்துக்காக பெறப்பட்ட அசல் பதிவு சான்றிதழ் வட்டார போக்குவரத்து அலுவலரிடம் ரத்துக்காக அனுப்பி வைக்கப்பட்ட பின்பு அதனை வட்டார அலுவலர் ரத்து செய்த பின்பு உரிய பதிவு சான்றிதழ் நேரடியாக காரின் உரிமையாளரிடமே சென்று விடுவதால் அதனை விலை கொடுத்து வாங்கிய கார் வியாபாரிகள் இதன் காரணமாக மிகவும் பாதிப்பு உள்ளாகி வருகின்றனர். எனவே வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் பதிவு சான்றிதழ் நேரடியாக கார் வியாபாரிகளிடம் வரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் தமிழ்நாடு மோட்டார் வாகன விதி 430 இப்படி வாகன உரிமையாளரிடம் இரண்டு ரூபாய் கோர்ட்டு முத்திரைத்தாளில் அனுமதி கடிதம் பெற்று வந்தால் இடைத்தரகர் இல்லாமல் முறைப்படி எங்களிடமே பொதுச் சான்றிதழ் தர ஆவணம் செய்ய வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது‌‌


இதில் பொருளாளர் வடிவேல், கௌரவத் தலைவர் பத்மநாபன், திருப்பத்தூர் மாவட்ட கார் வியாபாரிகள் சங்க முக்கிய நிர்வாகிகள் என சுமார் 50-க்கும் மேற்பட்ட கலந்து கொண்டனர்.


- மாவட்ட செய்தியாளர். மோ. அண்ணாமலை

No comments:

Post a Comment

Post Top Ad

*/