திருப்பத்தூரில் ஹஜ் யாத்திரை செல்லும் நபர்களுக்கு நடைபெற்ற ஓ பி வி எனப்படும் சிறப்பு தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் துவக்கி வைத்தார். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 15 May 2024

திருப்பத்தூரில் ஹஜ் யாத்திரை செல்லும் நபர்களுக்கு நடைபெற்ற ஓ பி வி எனப்படும் சிறப்பு தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் துவக்கி வைத்தார்.


தமிழகத்திலிருந்து வருகின்ற 25 ஆம் தேதி முதல் இஸ்லாமியர்கள் ஹஜ் யாத்திரை செல்ல தயாராகி வரும் நிலையில். திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி அரசினர் தோட்டம் பகுதியில் உள்ள சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகத்தில் திருப்பத்தூர் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் 2024 ஆம் ஆண்டு ஹஜ் யாத்திரை செல்லும் 329 நபர்களுக்கு யாத்திரையின் போது மூளை சம்பந்தமான நோய் தொற்று ஏற்படாத வண்ணம் ஓ பி வி எனப்படும் சிறப்பு தடுப்பூசி போடும்  முகாம்  நடைபெற்றது. 


இதில் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் கலந்து கொண்டு சிறப்பு தடுப்பூசி முகாமை துவக்கி வைத்தார். இதில் மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர் சித்ர சேனா மற்றும் ஹஜ் யாத்திரை கமிட்டி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு தடுப்பூசி முகாமானது இன்றும் நாளையும் இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


- மாவட்ட செய்தியாளர் மோ .அண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad

*/