பாஜக தோல்வி பயத்தால் கலவரம் செய்ய முயற்சிக்கிறார்கள் . - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 15 May 2024

பாஜக தோல்வி பயத்தால் கலவரம் செய்ய முயற்சிக்கிறார்கள் .

பாஜக தோல்வி பயத்தால் கலவரம் செய்ய முயற்சிக்கிறார்கள் - ஜனநாயக சக்திகள் ஒன்றினைய வேண்டும்-காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வபெருந்தகை வேண்டுகோள்.



திருப்பத்தூர் மாவட்டம், ரயில்நிலைய சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் மாவட்ட, வட்டார, பேரூர், கிராம கமிட்டிகளுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் பிரபு தலைமையில் நடைப்பெற்றது. 


இந்த கூட்டத்தில் தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார்,  தமிழக ஊடக பேரவை பொறுப்பாளர் திருச்சி வேலுசாமி,  ஆகியோர் கலந்துக்கொண்டனர். முன்னதாக நகர தலைவர் பரத் அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்ட  காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வபெருந்தகை கலந்துக்கொண்டு நிர்வாகிகளுக்கான ஆலோசனை வழங்கினார். 


அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் 379 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்திருக்கிறது. உளவுத்துறையின் ரிப்போர்ட் படி பெரும் தோல்வியை பாரதிய ஜனதா கட்சி சந்திக்கும் என கொடுத்திருக்கிறது.  அதனால் நாட்டில் பெரும் கலவரத்தை நடத்த வேண்டும் என்று பாஜக கட்சி துடித்துக்கொண்டிருக்கிறது.  அதனால் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றினைய வேண்டும். மோடியை தோற்கடிக்க வேண்டும் என்று  டெல்டா பகுதியில் உள்ள விவசாய சங்க தலைவர்கள் வாரணாசிக்கு செல்ல முயன்றார்கள். அங்கு செல்ல முற்பட்டவர்களை ரயில்வே துறை அதிகாரிகள் மூலம் தடுத்து நிறுத்தியதை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறோம்.


ராகுல்காந்தி இந்தியாவை வழிநடத்த வேண்டும் என்று முதல்வரே கூறி உள்ளார். அனைவருக்கும் புரியும். நாங்கள் யார் பிரதமர் என்று முடிவு எடுக்கவில்லை. திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் படுகொலை செய்யப்பட்டவர்களை காவல் துறையினர் 10 தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள். காவல்துறையின் மீது முழு நயம்பிக்கை உள்ளது. 


குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அண்ணாமலை பேசுவதை மக்களே தடுத்து நிறுத்துவார்கள் என்றார். காமராசரின் ஆட்சியை கொண்டு வருவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும்‌ காங்கிரஸ் எடுத்து வருகிறது என்றார்.


- செய்தியாளர் கோபிநாத்.

No comments:

Post a Comment

Post Top Ad

*/