வாணியம்பாடி அருகே நடைபெற்ற அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோயில் அக்னி வசந்த பெருவிழாவில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 30 May 2024

வாணியம்பாடி அருகே நடைபெற்ற அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோயில் அக்னி வசந்த பெருவிழாவில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோவிலில் மகாபாரதம் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்நிகழ்வு ஐந்து வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும்.


இதில் மகாபாரத சொற்பொழிவு கடந்த மாதம் தொடங்கி நேற்று 39 ஆம் நாள் அக்னி வசந்த பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் மூலவர் திரௌபதி அம்மனுக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.


பின்னர் பாலாற்றங்கரையிலிருந்து பூங்கரகம் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு திரௌபதி அம்மன் ஆலயத்திற்கு வந்தடைந்து. அக்னி குண்டம் எழுப்பப்பட்டிருந்த நிலையில் அதில் பூங்கரகத்துடன் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினர்.


இதில் ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து வழிபட்டுச் சென்றனர்.


- செய்தியாளர் கோபிநாத்.

No comments:

Post a Comment

Post Top Ad

*/