திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் நடைபெற்ற குரூப்-4 தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டார். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 9 June 2024

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் நடைபெற்ற குரூப்-4 தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டார்.

தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 4 தேர்வில் திருப்பத்தூர் மாவட்டத்தில் 25 ஆயிரத்து 994 மாணவ மாணவிகள் 99 தேர்வு மையங்களில் தேர்வு எழுதினர். இத்தேர்வு பணிகளை கண்காணிக்கும் வகையில் ஐந்து பேர் கொண்ட குழுவாக  27 பறக்கும் படைகள் உருவாக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.


இந்த நிலையில் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடத்தப்படும் குரூப் 4 தேர்வு மையத்தினை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் நேரில் சென்று பார்வையிட்டார். இதில் தேர்வாணையத்தின் தேர்வு பணியில் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


- செய்தியாளர்  கோபிநாத்.

No comments:

Post a Comment

Post Top Ad

*/