திருப்பத்தூர் அருகே கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாமை தொடங்கி வைக்க சென்ற மாவட்ட ஆட்சியர் சிறிதுநேரம் காலதாம. ஆனதால் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டு மாவட்ட ஆட்சியர் வியப்புடன் பார்த்த பொதுமக்கள்* - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 11 June 2024

திருப்பத்தூர் அருகே கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாமை தொடங்கி வைக்க சென்ற மாவட்ட ஆட்சியர் சிறிதுநேரம் காலதாம. ஆனதால் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டு மாவட்ட ஆட்சியர் வியப்புடன் பார்த்த பொதுமக்கள்*

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட விஷமங்கலம் அடுத்த சித்தேரி பகுதியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய கால்நடை நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் கால்நடை உதவி மருத்துவர் சந்திரமோகன் தலைமையில் நடைபெற்றது.


மேலும் இந்த முகாமிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.

அப்போது அங்கு வந்திருந்த கவுன்சிலர் வினோத் மற்றும் வார்டு உறுப்பினர்கள் தங்களுக்கு முகாமை இது குறித்து தகவல் முன்கூட்டியே அறிவிக்கவில்லை என குற்றம்சாட்டினர்

 அதனைதொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் முகாமிற்கு சிறிதுநேரம் காலதாமதமாக வந்ததால் அங்கு வந்திருந்த பொது மக்களிடமும் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் மன்னிப்பு கேட்டார்.

அப்போது அங்கு வந்திருந்த பொதுமக்கள் சிறித நேரம் காலதாமதமானதற்காக பொதுமக்களிடமே மாவட்ட ஆட்சியர் மன்னிப்பு கேட்கிறாரா என வியப்புடன் பார்த்தனர்.


மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் 1,15,700 கால்நடைகள் மாவட்டம் முழுவதும் உள்ளது இதில் சித்தேரி, விஷமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் 204 கால்நடைகள் உள்ளது.


இந்த நிலையில் முகாமிற்கு சித்தேரி, விஷமங்கலம் அங்கநாத வலசை, கோடியூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்களின் மாடு மற்றும் எருமைகளை அழைத்து வந்து தடுப்பு ஊசியை செலுத்தினர்.


 
- மாவட்ட செய்தியாளர்  மோ.அண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad

*/