திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள மேரி இம்மாகுலேட் பள்ளியில் சிறுத்தை ஒன்று நுழைந்தது, இதனை அறிந்த வனத்துறையினர் அதனைப் பிடிக்க தீவிரம் காட்டினர், பொதுமக்கள் மாணவர்கள். பெரும் அச்சம் அடைந்தனர்.
திருப்பத்தூர் மாவட்ட, தொடர்வண்டி நிலையம் அருகே சிறுத்தை இருப்பதை உறுதி செய்து காவல்துறை மற்றும் வனத்துறை மாவட்ட நிர்வாகம், ஒன்றிணைந்து மிக தீவிரமான பாதுகாப்பு வளையத்திற்குள் சிறுத்தை இருக்கும் பகுதியை கொண்டு வந்துள்ளனர். சிறுத்தை தாக்கியதில் முதியவர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கவும், அந்த பகுதிக்கு வருவதை தவிர்க்கவும் மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளனர், நாளை திருப்பத்தூர் மாவட்ட தனியர் பள்ளிகளுக்கு விடுமுறை.
- மாவட்ட செய்தியாளர் மோ அண்ணாமலை.
No comments:
Post a Comment