ஊரக உள்ளாட்சி தேர்தல்,9 மாவட்டங்களுக்கு விதிவிலக்கு அளிக்க கோரி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 11 June 2024

ஊரக உள்ளாட்சி தேர்தல்,9 மாவட்டங்களுக்கு விதிவிலக்கு அளிக்க கோரி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.


தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு  27 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைப்பெற்றது. இதில் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைப்பெற்றது.


இதனையடுத்து தமிழகத்தில் வருகிற டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைப்பெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் 9 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவி காலம் முடிவதற்குள் தேர்தல் நடந்தால் இட ஒதுக்கீடு செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் பாதிக்கப்படுவதாவும், பொதுமக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்படுவதால் தமிழக அரசு 9 மாவட்டங்களுக்கு விதிவிலக்கு அளித்து ஊரக உள்ளாட்சி தேர்தல் 5 ஆண்டுகள் நிறைவு பெற்ற பின்பு தேர்தல் நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தர்பகராஜிடம் திருப்பத்தூர் மாவட்ட அனைத்து ஊராட்சி மன்ற தலைவர் கூட்டமைப்பினர் கோரிக்கை மனு அளித்தனர்.


- செய்தியாளர் கோபிநாத்.

No comments:

Post a Comment

Post Top Ad

*/